பிலவ வருடம் I ஆடி 5 I புதன் கிழமை I ஜூலை 21, 2021
மேஷம் :
பணிச்சுமை குறையும். அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்ட நிலை மாறும். குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்பட்டு மறையும். பொறுமை தேவை. நாவடக்கம் தேவை. மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். தொழில் பங்குதாரர் களால் தொல்லை ஏற்படலாம். பயணங்களால் விரயம் உண்டு.
ரிஷபம் :
பொருளாதார முன்னேற்றம் இருக்கும். முயற்சி வெற்றி பெறும். நினைத்த விஷயம் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர எண்ணம் வரும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி காண்பீர்கள். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீட்டுப் பராமரிப்புச் செலவு கூடும். பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பிரச்சினை களிலிருந்து விடுபடலாம்.
மிதுனம் :
விலகிச் சென்ற உறவினர்கள் உங்களை நாடி வருவார்கள். வராது என்று நீங்கள் கைவிட்ட பணம் தானாக வந்து சேரும். மனதுக்குப் பிடித்த விருந்தினர்களின் வருகையால் மகிழ்வீர்கள்.சந்தோஷம் அதிகரிக்கும் நாள். விரதம், வழிபாடு களில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
கடகம் :
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகள் அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.
சிம்மம் :
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
கன்னி :
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சொத்து பிரச்னைக்கு சுமுக தீர்வு வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
துலாம் :
நல்ல பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சாதகமான சூழல் உள்ளது. வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம் :
கடின உழைப்பை வெளிப்படுத்துவதன் மூலம் கவனத்துடன் செயல்படுவதன் மூலமும் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமான நாளாக மாற்றலாம். வேலையில் கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். செய்த வேலையை மீண்டும் செய்ய வேண்டிய சூழல் வரலாம். குடும்பத்தில் நட்புறவு குறைந்து காணப்படும். மனம் திறந்து பேசுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் மோதலை தவிர்க்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு :
சாதகமான நாளாக இருக்காது. இன்றைய நாள் ஓரளவுக்கு பாதுகாப்பாக கழிய திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. சௌகரியங்களை விட்டுக்கொடுக்கும் சூழல் ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
மகரம் :
எதையோ இழந்தது போன்ற ஒரு உணர்வு மனதிற்குள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் உங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்பட ஆரம்பிப்பீர்கள். குடும்பத்தில் உங்களை அதிக மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்து கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
கும்பம் :
எதையும் எதிர்க்கும் துணிவு ஏற்படும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடிவாளம் கட்டியது போல தங்கள் இலக்கை நோக்கிய முன்னேற்றத்தில் இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழி அனுகூலமான காரியங்கள் நிறைவேறும். வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மீனம் :
திடீரென எடுக்கும் முடிவுகளை கவலை கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பழக்க வழக்கங்களை தவிர்த்துக் கொள்வது உத்தமம். பெரிய மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பொறுப்புகள் சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய வைக்கும்.