• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - செவ்வாய்கிழமை ஜூலை 13, 2021

  • Share on

பிலவ வருடம் I ஆனி 29 I செவ்வாய்கிழமை I ஜூலை 13, 2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளுக்கு சுபமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் வேகமாக செய்து முடிக்கும் வலிமை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பணத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. வெளியூரிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை உங்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்த எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் வீட்டுத் தேவைகள் யாவையும் எளிதாக பூர்த்தி செய்ய உதவும். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இடையூறாக இருந்த சில விஷயங்கள் நீங்கி நல்ல இனிய நாளாக அமைய இருக்கிறது. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முடிவுகளுக்கு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றால் சாதக பலன்களை பெறுவீர்கள். 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன சஞ்சலத்தில் இருந்து விடுபடுவீர்கள். கடன் தொகைகள் குறையும் யோகம் உண்டு. உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் செயல்படுவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டாளிகளின் ஆதரவுக் திருப்தியைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சில விஷயங்கள் வெற்றி அடைவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். எதிர்ப்புகள் விலகி நன்மைகள் நடக்கும் நாளாக அமைய இருக்கிறது. 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி வதற்கான வாய்ப்புகள் அமையும். சுயதொழிலில் உங்களுடைய உண்மைநிலை வெளிப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளில் சாதக பலன் பெறுவீர்கள். எதையும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து வெற்றி காண்பீர்கள். 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உருவாகும். சுயதொழில் எதிர்பார்ப்பதை விட லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சினைகளை சமாளித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. 

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான திறமையால் பல சிக்கல்களை தீர்த்து வைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் செலவைக் காட்டிலும் வரவு கூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையான நேரத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற நபர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். ஆரோக்கியம் மேம்படும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பயணங்கள் மூலம் வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை தரம் உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். 

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீண்டநாள் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு விரக்தியை ஏற்படுத்தும் வகையில் அமையும். கூடுமான வரை முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையைக் வாழ்வது மிகவும் நல்லது. 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய தாராளமான மனதால் பலரின் ஆசீர்வாதங்களை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய காரியங்களில் ஈடுபடும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே பனிப்போர் நடக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். 

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

  • Share on

இன்றைய ராசி பலன் - திங்கட்கிழமை ஜூலை 12, 2021

இன்றைய ராசி பலன் - புதன்கிழமை ஜூலை 14 2021

  • Share on