பிலவ வருடம் I ஆனி 28 I திங்கட்கிழமை I ஜூலை 12, 2021
மேஷம்
எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செய்யும் முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முன்னேற்றமான நாள். வாய்ப்புகள் உண்டாகும். மாற்றமான நாள்.
ரிஷபம்
சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். ஆதரவான நாள். மகிழ்ச்சி உண்டாகும். குழப்பங்கள் நீங்கும்.
மிதுனம்
உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்களும், ஒப்பந்தங்களும் சாதகமாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உண்டாகும்.கருத்து வேறுபாடுகள் குறையும். மாற்றங்கள் ஏற்படும். சாதகமான நாள்.
கடகம்
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். புதிய முயற்சிகள் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்து வீர்கள்.நெருக்கடிகள் குறையும். சிந்தித்து செயல்படவும். திறமைகள் வெளிப்படும்.
சிம்மம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சிந்தனைகள் உண்டாகும். மாற்றங்கள் ஏற்படும். தாமதங்கள் குறையும்.
கன்னி
தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சேமிப்புகள் அதிகரிக்கும். முன்னேற்றம் உண்டாகும். பொறுமை வேண்டும்.
துலாம்
தந்தை வழி உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். விவாதங்களை தவிர்க்கவும். மகிழ்ச்சியான நாள். சிந்தனைகள் மேம்படும்.
விருச்சிகம்
குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவு கிடைக்கும். கால்நடை மருத்துவம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். சிந்தனையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆதரவு கிடைக்கும். மேன்மையான நாள். இன்னல்கள் குறையும்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களின் உண்மை நிலையை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பார்த்த சில நிகழ்வுகள் காலதாமதமாக நிறைவேறும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கருத்து வேறுபாடுகள் உண்டாகும். காலதாமதம் ஏற்படும். பொறுமை வேண்டும்.
மகரம்
நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆதரவான நாள். சிந்தனைகள் அதிகரிக்கும்.
கும்பம்
உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் அமைதியின்மையும், போராட்டமும் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஒத்துழைப்பு கிடைக்கும். புரிதல் உண்டாகும். ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் செய்யும் மாற்றங்களுக்கு பாராட்டும், ஆதரவும் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அபிவிரு த்தியான நாள். பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.