• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - சனிக்கிழமை ஜூலை 10, 2021

  • Share on

பிலவ வருடம் I ஆனி 26 I சனிக்கிழமை I ஜூலை 10, 2021

மேஷம்

உற்சாகமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

சவால் நிறைந்த நாளாக இருக்கும். வெற்றி பெற அணுகுமுறையில் மாற்றம் செய்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். தேவை அதிகரிக்கும்.

மிதுனம்

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்று. புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சாதகமாக மாற்றலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவைப் பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். கவனச் சிதறல் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. நற்பெயர் பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். நிதி நிலை ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்

சிறப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை, தொழில் சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். முன்னேற்றங்களைக் காண்பீர்கள். வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

துலாம்

அனுகூலம் குறைந்து காணப்படும். கோவில், ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் பதற்றம் நிலவும். இதன் காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உணர்ச்சிப் பெருக்கான சூழல் நிலவும். இதனால் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

விருச்சிகம்

சுமாரான நாளாக இருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.

தனுசு

சாதகமான நாளாக இருக்கும். வெற்றிகளைக் குவிப்பீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். வேலையில் திருப்பதியான சூழல் காணப்படும். தன்னம்பிக்கையுடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

மகரம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் அனுகூலமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது சாதகமான பலனை அளிக்கும். குடும்பத்தில் திருப்திகரமான சூழல் காணப்படும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை முன்னேற்றமாக இருக்கும்.

கும்பம்

தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நிதானத்தை கைவிடாமல் செயல்படுவது நல்லதை தரும். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவ விட்டுக்கொடுப்பது அவசியம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்

பதற்றமான நாளாக இருக்கும். மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்வது அவசியம். வேலை சூழல் கடினமானதாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு குறைந்து காணப்படும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். சேமிப்பு கரையும்.

  • Share on

தர்மம்தான் மனிதனைக் காக்கும்!

இன்றைய ராசி பலன் - ஞாயிற்றுக்கிழமை ஜூலை 11, 2021

  • Share on