• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - செவ்வாய்க்கிழமை ஜூலை 6, 2021

  • Share on

பிலவ வருடம் I ஆனி 22 I செவ்வாய்க்கிழமை I ஜூலை 6, 2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத திடீர் மாற்றங்கள் வியப்பில் ஆழ்த்த கூடும். சுயதொழிலில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உங்களுடைய பங்களிப்பு மற்றவர்களுக்கு முன்னு தாரணமாக அமையும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்க ளுக்கு தேவையற்ற அலைச்சல் வரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பயணங் களின் பொழுது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீர கூடிய வகையில் புதிய நபர்களை சந்திப்பீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூட எளிதாக செய்து முடிக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. புதிதாக சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல பலன்களை காணலாம். ஆரோக்கியம் மேம்பட்டு வரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. மூன்றாம் மனிதர்களுடைய பிரச்சனைகளில் தலையீடு செய்தால் வம்பு வழக்குகள் ஏற்படலாம். உத்யோகத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கா விட்டாலும் விரயங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத்தை சீர் செய்து கொள்ளலாம். 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். நீண்ட நாள் உழைப்புக்கு உரிய பலன்களும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரிய தொகையைப் பயன்படுத்தி அதிக லாபம் காணக்கூடிய வகையில் சாதகப் பலன்கள் உண்டு. 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனதில் நினைக்கும் காரியம் ஒன்று நினைத்தபடியே நடக்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் வலுவாக உப்புக்கள் இருப்பதால் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய நாணயத்திற்கு உரிய பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளுக்கு மற்றவர்களிடம் பாராட்டுப் பெறும் யோகம் உண்டாகும். 

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது வேறு ஒன்றாக நடக்க வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சாதகமான செய்திகளை கேட்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாக வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமண தடைகள் அகலும். மனதிற்கு பிடித்தவரை மணம் முடித்துக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உங்களுடைய திறமைக்கு உரிய புதிய பொறுப்புகள் ஒப்படைக்கலாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். 

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய நினைவுகளை அசைபோட்டு பார்க்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். கூடுமானவரை மற்றவர்களிடம் இனிமையாக பேசி கொள்வது நல்லது. வார்த்தைகளை ஒருமுறை விட்டு விட்டால் மீண்டும் அல்ல முடியாது என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுற்றியிருப்பவர்கள் உடைய குறைவான செயல்பாட்டை தட்டிக் கேட்பீர்கள். சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். சுயதொழிலில் அதிகம் சகிப்புத் தன்மையுடன் செயல்படுவது மிகவும் நல்லது. உத்யோகத்தில் இருப்பவர் களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்துவது உத்தமம். 

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கொடுத்த வாக்குறு திகளை காப்பாற்ற முற்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற் கான வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள்.

  • Share on

சதுரகிரி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி!

இன்றைய ராசி பலன் - புதன்கிழமைகிழமை ஜூலை 7, 2021

  • Share on