சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி பிரதோஷம் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஜூலை 7, 8, 9, 10 தேதிகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மலையில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. 10 வயதுக்கு கீழ், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறும் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.