பிலவ வருடம் I ஆனி 21 I திங்கட்கிழமை I ஜூலை 5, 2021
மேஷம்
சாதகமான நாளாக இருக்கும். மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது நல்லது. வேலை சூழல் சற்று கடினமானதாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவு அதிகமாக காணப்படும். செலவுகள் அதிகரிக்கலாம்.
ரிஷபம்
மன அழுத்தம் அதிகரிக்கும் என்றாலும் மனதை உற்சாகமாக வைத்திருப்பதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றம். வேலை சூழல் கடினமாக இருக்கும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது.
மிதுனம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுமுக சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை உற்சாகத்தை அளிக்கும்.
கடகம்
முன்னேற்றமான நாளாக இருக்கும். நடக்கும் விஷயங்கள் திருப்தியை அளிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் அமைதியாக இருக்கும். உற்சாகத்துடன் வேலையை செய்வீர்கள். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.
சிம்மம்
நிதானமாகச் செயல்பட வேண்டிய தினமாக இருக்கும். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை மனதில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். தடைகள் வந்தாலும் அதை எளிதாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் நல்லுறவை தக்க வைக்க குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு, சிரித்துப் பேசுவது நல்லது. பண வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும்.
கன்னி
கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். வீண் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. வேலை சூழல் சவால் நிறைந்தாக இருக்கும். திட்டமிட்டு சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தைக் காக்கலாம். செலவுகள் அதிகரிக்கும்.
துலாம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சரியாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும் எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது.
தனுசு
சௌகரியமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, நிதானம், நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை சூழல் சற்று கடினமாக இருக்கும். இருப்பினும் அனைத்தையும் சுறுசுறுப்பாக திறம்பட முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழல் வரலாம்.
மகரம்
யதார்த்தமான நாளாக இருக்கும். வெற்றி கிட்டுவது சற்று சவாலானதாக இருக்கும். நிதானமாக செயல்படுவது நல்லது. வேலை சூழல் சுமாராக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவைப் பராமரிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.
கும்பம்
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.
மீனம்
மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். உடன் உள்ளவர்களே நமக்கு எதிராக திரும்பு அளவுக்கு பாதிப்பு ஏற்படலாம். வேலைப் பளு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்கும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் கவலையான சூழல் நிலவும். பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண வரவும் செலவும் இணைந்தே இருக்கும்.