பிலவ வருடம் I ஆனி 20 I ஞாயிற்றுக்கிழமை I ஜூலை 4, 2021
மேஷம்
தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்வது இன்றைய நாள் சாதகமாக அமைய உதவும். வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் முரண்பாடு காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
உற்சாகமான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள். வேலையில் வளர்ச்சிகரமான சூழல் காணப்படும். முன்னேற்றங்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.
மிதுனம்
சாதகமான நாளாக இருக்கும். சற்று கடின உழைப்பை வெளிப்படுத்தினால் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். வேலை சூழல் பலன்கள் நிறைந்ததாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே சமூக உறவு காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
கடகம்
சாதகமான நாளாக இருக்கும். நற்பலன்கள் நிறைந்து காணப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் இலக்குகளை அடையலாம். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
நிதானத்தைச் சோதிக்கும் நாளாக இருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் நிதானத்தைக் கைவிட்டுவிட வேண்டாம். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் இருக்கும். குடும்பத்தில் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.
கன்னி
சுமாரான நாளாக இருக்கும். வளைந்து கொடுப்பதன் மூலம் இன்றைய நாளை இனிதாக மாற்றலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் வாக்குவாதம் எழலாம். கணவன் மனைவி இடையே சுமுக உறவு நிலவ சாந்தமாகப் பேசுவது நல்லது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.
துலாம்
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமமான நாளாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. கையிருப்பு போதுமானதாக இருக்கும்.
விருச்சிகம்
திருப்தியான நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் உற்சாகத்துடன் இருப்பீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் பிரச்னை காரணமாக குடும்பத்தில் அமைதி பாதிக்கப்படலாம். எனவே ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வது நல்லது. நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு
கவலைகள் அதிகரிக்கும். எதையும் மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் லேசாக எடுத்துக்கொள்ளுங்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. மனக் கவலை காரணமாக வேலையில் தடுமாற்றம் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். பணத் தட்டுப்பாடு ஏற்படும்.
மகரம்
பிரச்னையான நாளாக இருக்கும். சோர்வு அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.
கும்பம்
முற்போக்கான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மீனம்
சோர்வான நாளாக இருக்கும். அன்றாட பணிகளைக் கூட செய்வதில் தடுமாற்றம் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. இதனால் வேலை தொடர்பான கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் நட்புறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே புரிதலை ஏற்படுத்துவது அவசியம். பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.