• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - வெள்ளிக்கிழமை ஜூலை 2, 2021

  • Share on

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் சவால்களை சமாளிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும். 

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீராத துன்பங்கள் தீர கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படுவதால் டென்ஷன் இருக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் இணக்கமாக செய்வது நலம் தரும். தேவையற்ற பிரச்சனைகளை தலையில் போட்டுக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் விஷயங்க ளுக்கு எதிர்மறையாக சில விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. உறுதியான பணம் அமைப்பை கொண்ட உத்தியோகஸ்தர்கள் எதிர்ப்பை மீறி முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ் தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நலம் தரும். 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி காண புதிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணலாம். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்களைக் காண கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் கவனம் தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இழந்த மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீட்டிய திட்டங்கள் யாவும் திட்டியபடியே நிறைவேறக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது உத்தமம். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் தீர ஆலோசனை செய்து கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான அதிரடி மாற்றங்கள் சிறப்பான பலன்களை கொடுக்கும். வாடிக்கையா ளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஊதிய உயர்வு போன்ற வற்றில் சாதக பலன்களை காண்பீர்கள். 

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் நபர்களும் அறிவுரை கேட்டு செயல்படுவது உத்தமம். பெற்றோர்களின் ஆரோக்கி யத்தில் கவனம் செலுத்துங்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்க ளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம். உத்யோ கத்தில் இருப்பவர்களுக்கு இது வரை இருந்து வந்த பகைவர்களின் தொல்லை ஒழியும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பாதை பிறக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோக ரீதியான பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர் களுக்கு தேவையற்ற நண்பர்களின் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் விழிப்புணர்வு தேவை. உத்யோகத்தில் இருப்பவர் களுக்கு அதிகம் பொறுப்பு உணர்வு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஓய்வில்லாத உழைப்பு விரக்தியை உண்டு பண்ணும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை புதிய உத்திகளைக் கையாள்வதை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண்பழி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

  • Share on

இன்றைய ராசி பலன் - வியாழக்கிழமை ஜூலை 1, 2021

இன்றைய ராசி பலன் - சனிக்கிழமை ஜூலை 3, 2021

  • Share on