• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - வியாழக்கிழமை ஜூலை 1, 2021

  • Share on

01-07-2021 பிலவ வருடம் ஆனி மாதம் 17 ம் நாள், வியாழக்கிழமை. தேய்பிறை, சப்தமி திதி மாலை 6:37 வரை,  அதன்பின் அஷ்டமி திதி, பூரட்டாதி  நட்சத்திரம் காலை 6:48 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்,  சித்தயோகம்.

மேஷம்
வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மின்சாரம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும்.

ரிஷபம்
தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றம் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வாகனங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

கடகம்
மருத்துவ பொருட்கள் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். வாகனப் பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்வதன் மூலம் எதிர்பாராத விரயச் செலவுகளை குறைக்க இயலும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும்.

சிம்மம்
உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். உணவு தொடர்பான விஷயங்களில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு ஏற்படும். வித்தியாசமான செயல் பாடுகளில் ஆர்வம் உண்டாகும். மறைமுகமாக இருக்கக்கூடிய எதிர்ப்புகள் மற்றும் செலவுகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

கன்னி
நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். விவாதங்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் புரிதல் மேம்படும்.

துலாம்
உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் லாபம் மேம்படும். சந்தேக உணர்வுகளை குறைத்துக்கொண்டு நிதானமான முடிவுகளை எடுப்பது தேவையற்ற பகையை தவிர்க்க இயலும்.

விருச்சிகம்
மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், சாதகமான சூழ்நிலைகளும் உண்டாகும். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

தனுசு
வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பாசனம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். கால்நடைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய விவரங்களை கண்டறிவீர்கள். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக செயல் படுவார்கள். பொறுப்புகள் குறைந்து வாகன வசதிகள் மேம்படும்.

மகரம்
சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். காதில் அணியும் ஆபரணங்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். எண்ணிய காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

கும்பம்
தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் விரயங்கள் ஏற்பட்டாலும் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். பங்கு வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும்.

மீனம்
மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களை பற்றிய தெளிவும், புரிதலும் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடனிருப் பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் கையாளவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை கூறும் பொழுது கவனம் வேண்டும்.

  • Share on

இன்றைய ராசி பலன் - புதன்கிழமை ஜூன் 30, 2021

இன்றைய ராசி பலன் - வெள்ளிக்கிழமை ஜூலை 2, 2021

  • Share on