• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - புதன்கிழமை ஜூன் 30, 2021

  • Share on

30.06.2021 பிலவ வருடம் ஆனி மாதம் 16 ம் நாள், புதன்கிழமை. தேய்பிறை, சஷ்டி திதி மாலை 6:06 வரை,  அதன்பின் சப்தமி திதி, பூரட்டாதி  நட்சத்திரம் நாள் முழுவதும்  அமிர்த யோகம்.

மேஷம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர் களுடன் வீண் விவாதம் வந்து போகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில்  பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நல்ல மாற்றங்கள் நிறைந்த நாள்.

மிதுனம்
எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கடகம்
பொறுப்புணர்வு அதிகரிக்கும். பிரச்னை ஒன்று முடியும். பேச்சுவார்த்தையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை காணும் நாளாக இருக்கும்.

சிம்மம்
வியாபாரம் செய்பவர்களுக்கு, எதிர்பாராத செலவு உண்டாகும்.
எந்த விஷயத்தையும் முடிக்க முடியாமல் திணறிய நிலை மாறும்.
நண்பர்களுடன் வாக்குவாதத்தினால் பிரச்னை வந்து விலகும்.

கன்னி
பணியை முடிக்க வேண்டுமே என்று சோம்பல் ஏற்படும். ஆயுதங்களை பயன்படுத்தும்போது மிகுந்த கவனமாக இருங்கள். பிரச்னை ஒன்றை மிகவும் சாமர்த்தியமாகக் கையாளுவீர்கள்.

துலாம்
வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியைக் காப்பாற்றும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். வாங்கல்-கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும். நண்பர்களால் நல்லதகவல் வந்து சேரும்.

விருச்சிகம்
பதற்றமான நாளாக இருக்கும். மனதில் அமைதியின்மை, அசௌகரியம் அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. கூடுதல் கவனத்துடன் வேலையை செய்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதலை தடுக்க நிதானமாகச் செயல்படுவது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

தனுசு
வெற்றிகரமான நாளாக இருக்கும். இலக்குகளை நோக்கி தொடர்ந்து முன்னேற ஏற்ற நாள் இன்று. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்தில் சீரான உறவு நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்
சாதகமான நாளாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே உறவு சீராகும். பண வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்புள்ளது.

கும்பம்
உடனிருப்பவர்கள் பற்றிய எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். சபை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பங்கு வர்த்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் காரிய வெற்றிகளை அடைவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் மற்றும் கனவுகளை உருவாக்குவீர்கள். அமைதியான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான குறைபாடுகள் குறையும்.

மீனம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் நிறைவான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் பொருட்களின் மீது ஆர்வம் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும்.

  • Share on

இன்றைய ராசி பலன் - செய்வாய்க்கிழமை ஜூன் 29, 2021

இன்றைய ராசி பலன் - வியாழக்கிழமை ஜூலை 1, 2021

  • Share on