29.06.2021 பிலவ வருடம் ஆனி மாதம் 15 ம் நாள், செவ்வாய்க்கிழமை. தேய்பிறை, பஞ்சமி திதி மாலை 6:08 வரை. பிறகு சஷ்டி திதி. சதயம் நட்சத்திரம் அதிகாலை 5:42 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம். மரணயோகம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற இடங்களில் செய்யக்கூடிய வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் உங்களுக்குதான் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பணவரத்து இருக்கும். எந்த ஒரு செயலையும் அடுத்தவர்களை நம்பி ஒப்படைப்பதில் கவனம் தேவை. எதையும் யோசிக்காமல் செய்வதை தவிர்க்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு மேன்மை உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து புதிய முயற்சிகளில் ஈடுபட துவங்குவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு செய்யும் பணி மீது கூடுதல் மரியாதை ஏற்படும். பயபக்தியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து செல்லலாம். அதனை ஊதி பெரிதாக்காமல் இருப்பது நல்லது.
கடகம்
சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திச் செயல்படுவது நல்லது. வேலையில் வளர்ச்சிகளைக் காணும் நேரத்தில் தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பணத் தேவை அதிகரிக்கும்.
சிம்மம்
உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் அதிகரிக்கும் உற்சாகமே இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றும். வேலை சூழல் வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். சுறுசுறுப்புடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கன்னி
வெற்றிகரமான நாளாக இருக்கும். அனைத்திலும் சாதகமான சூழல் நிலவும். உற்சாகம் அதிகரிக்கும். வேலை, தொழிலில் வெற்றிகளைக் குவிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். முதலீடுகள் செய்ய ஏற்ற நாள்
துலாம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சியை மேற்கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
விருச்சிகம்
எதிர்பார்த்த விஷயம் தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.
தனுசு
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். சொத்து வாங்குவது விற்பது சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழையசரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். உத்தியோ கத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்
மனக்குழப்பம் அகலும் நாள். லட்சியங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை அகலும். தொழில் வளர்ச்சி உண்டு. பல நாட்கள் பாடுபட்டதற்கு நன்மை கிடைக்கப்பெறுவீர்கள்
கும்பம்
கலகலப்பான நாள். காரிய வெற்றிக்கு கண்ணிய மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடம் சம்பந்தமாக இருந்த பிரச்சினை அகலும். நட்பால் நன்மை உண்டு. சுபவிரயம் ஏற்படும். சிறிது பணிந்து போக வேண்டி இருக்கலாம். மனம் அலைபாயும்.
மீனம்
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். விட்டுப்போன விவாகப் பேச்சுகள் மீண்டும் வந்து சேரலாம். காத்திருந்த நல்ல செய்தி வருவது தாமதமாகும். பொறுமை தேவை.