• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - ஞாயிற்றுக்கிழமை ஜூன் 27, 2021

  • Share on

27.06.2021 பிலவ வருடம் ஆனி மாதம் 13 ம் நாள்,  ஞாயிற்றுக்கிழமை. திருதியை திதி இரவு 7:43 வரை. பிறகு சதுர்த்தி திதி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 5:29க்கு மேல் அவிட்டம் நட்சத்திரம். அமிர்தயோகம் பின்இரவு 5:29க்கு மேல் மரணயோகம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மற்றவர்களுக்கு சாதகமாக மாறக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிக ளுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி பிரச்சனைகள் தீரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி உண்டாகும் அற்புதமான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் குடும்ப பிரச்சனைகள் தீரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவு களை குறைத்துக் கொள்வது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் நிதானம் தேவை. வார்த்தைகளை உதிர்த்து விட்டால் மீண்டும் அல்ல முடியாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சி களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் கூடுதல் செலுத்துங்கள்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் துயரங்கள் யாவற்றையும் நீக்கக் கூடிய வலிமை ஏற்படும். மன உளைச்சலில் இருந்து மீள்வதற்கு அதிகம் போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை உற்சாகத்தை அளிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்க ளின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர் களுக்கு தான் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. காரண காரியங்கள் இன்றி எந்த ஒரு முடிவையும், செயலிலும் இறங்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் தனித்துவத்தை மேலதிகாரிகள் உணர்ந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். போட்டி பொறாமைகள் நீங்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புது உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபா ரத்தில் இருப்பவர்களுக்கு மென்மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நலம் தரும். உத்யோகத்தில் இருப்பவர் களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொட்டது துலங்கும் அற்புதமான நாள் என்பதால் சுபகாரிய பேச்சு வார்த்தைகளை துவங்கலாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கி பரஸ்பர அன்பு மேலோங்கும். நல்ல சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசினால் நன்மைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி பெற பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் நீங்கும். உற்றார் உறவினர்களின் பகை விலகும். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் அவர்களை மீண்டும் வந்து இணைவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வது தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பணவரவு குறித்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை. முன் பின் தெரியாதவர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய அவசரத்திற்கு காலச் சக்கரம் சுழலாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருந் தவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். சுபகாரியத் தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைப்பதெல்லாம் நடக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களை நம்பி இருந்த சிலர் மாற்று வழியைத் தேடி செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர் களிடம் நன்மதிப்பு உண்டாகும். உங்களுடைய திறமையை நிரூபிக்க கூடிய நல்ல தருணமாக அமையும்.

  • Share on

இன்றைய ராசி பலன் - சனிக்கிழமை ஜூன் 26, 2021

இன்றைய ராசி பலன் - செய்வாய்க்கிழமை ஜூன் 29, 2021

  • Share on