26.06.2021 பிலவ வருடம் ஆனி மாதம் 12 ம் தேதி, சனிக்கிழமை. துதியை திதி இரவு 9:07 வரை, பிறகு திருதியை திதி, பூராடம் நட்சத்திரம் காலை 6:50 க்கு மேல் உத்ராடம் நட்சத்திரம். சித்தயோகம். மேல் நோக்கு நாள்
மேஷம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் செயல்பாட்டினைக் கண்டு ஆச்சரியப்படுவர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
ரிஷபம்
அனைத்து வேலைகளும் அரை குறையாக நிற்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது, குடும்பத்தினர் உங்கள் செயல்பாடு களில் குறை கண்டு பிடிக்கலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
மிதுனம்
வளர்ச்சியான நாளாக இருக்கும். திறமையை வெளிப்படுத்துவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை முன்னேற்றமாக இருக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
கடகம்
முயற்சியில் வெற்றிபெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். மனதை ஆன்மிகம், தியானம் போன்றவற்றில் ஈடுபடுத்துவது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். மனதில் பதற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைவு நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்காது.
சிம்மம்
சுமாரான நாளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து நம்பிக்கையை பாதிக்கும். வேலையில் மந்தமான சூழல் காணப்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.
கன்னி
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சொந்தங்கள், சுற்றத்தாரின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.
துலாம்
எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர் கள். உழைப்பால் உயரும் நாள்.
விருச்சிகம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
தனுசு
பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.
நெருங்கியவரின் ஆசையை நிறைவேற்றி அவரின் பிரமிப்புக்கு ஆளாவீர்கள். முயற்சித்த விஷயம் முடிவதற்குத் தாமதமாகும்.
மகரம்
வெளிமாநிலம் சென்றவர்கள் வெற்றியுடன் திரும்பி வருவீர்கள்.
வீட்டில் ஒருவருக்குப் பழைய நண்பரால் ஆதாயம் உண்டு. மற்றவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாதபடி பேசுங்கள்.
கும்பம்
இன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும்.