பிலவ வருடம், ஆனி 11, வெள்ளிக்கிழமை, 25.6.2021 தேய்பிறை, பிரதமை திதி இரவு 10:50 வரை, அதன் பின் துவிதியை திதி, மூலம் நட்சத்திரம் காலை 7:59 வரை, அதன் பின் பூராடம் நட்சத்திரம், அமிர்தம் - சித்தயோகம்.
மேஷம்
சலனமில்லாத நாளாக இருக்கும். பெரிய உற்சாகமோ அல்லது பிரச்னையோ இருக்காது. மனக் குழப்பம் ஏற்படலாம். வேலை சூழல் சுமாராக இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.
ரிஷபம்
இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். வேலையை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்வுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். துணைவருடன் புரிதல் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வளமான நாளாக அமையும்.
மிதுனம்
பதற்றம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் பயம், பதற்றம் அதிகரிக்கும். உங்கள் திறமைகளுக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் கிடைக்காமல் வேதனை அடைவீர்கள். துணைவருடன் அன்பாக நடந்துகொள்ளுங்கள். ஈகோவை விட்டொழித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணத் தேவை அதிகரிக்கும்.
கடகம்
சுமாரான நாளாக அமையும். மன உறுதி, ஆற்றல் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிப்பதால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் அமைதி காணப்படும். துணைவரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.
சிம்மம்
சிக்கல்கள் வந்து விலகும் நாளாக இருக்கும். தவறுகளைத் திருத்திக் கொண்டு செயல்படும்போது வெற்றி கிட்டும். பணியில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். துணைவருடன் நல்லுறவு காணப்படும். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
கன்னி
அனுகூலமான நாளாக இருக்கும். ஓரளவுக்கு உற்சாகம் இருக்கும். வேலை காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கடின உழைப்பு ஏற்ற அங்கீகாரம் இருக்காது. குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும்.
துலாம்
குழப்பம் அதிகரிக்கும் நாளாக இன்றைய தினம் இருக்கும். இலக்கை நோக்கிய பயணத்தில் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை சமாளிக்க முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் அமைதியின்மை நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். சேமிப்பு கரையும்.
விருச்சிகம்
இன்றைய நாள் சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறாமல் எரிச்சல் அதிகரிக்கும். வேலையில் கவனக்குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். அதிகப்படியான மன உணர்வுகளைத் துணைவரிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் சண்டை ஏற்படலாம். நட்பாக பேசுவது நல்லது. செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய தினம் இன்று. வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் காணப்படும். பணப்புழக்கம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
மகரம்
சுறுசுறுப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். வேலையில் வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முயற்சி செய்தால் உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வேலையில் முன்னேற்றம் காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்
மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலையில் தவறுகள் ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அன்பான உணர்வு குறைந்து காணப்படும். பண வரவு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் செலவு அதிகமாக இருக்கும்.