• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - வியாழக்கிழமை ஜூன் 24, 2021

  • Share on

பிலவ வருடம், ஆனி 10, வியாழக்கிழமை, 24.06.2021, தேய்பிறை, பவுர்ணமி திதி நள்ளிரவு 12:51 வரை, அதன் பின் பிரதமை திதி, கேட்டை நட்சத்திரம் காலை 9:20 வரை, அதன் பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம்.

மேஷம்
எதிர்பாலின நட்புகளுடன் நெருக்கம் கூடும். பயம் நீங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிலும் கவனம் தேவை. மதிப்புக் குறையும் படியான செயல்களில் ஈடுபட வேண்டாம்.

ரிஷபம்:

பிள்ளைகள் மூலம் வரும் செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும். கற்பனையான காரணங்களால் மனக்கவலை உண்டாகும். கல்வி சம்பந்தமான முயற்சிகளில் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்:

சக பணியாளர்களிடம் இருந்த பிரச்னை ஒன்று தீரும். நெருங்கிய நண்பர்களின் உதவி உங்களுக்குத் தேவைப்படும்
நிதி நிலையில் முன்பைவிட சிறு முன்னேற்றம் தெரியும்.

கடகம்

அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. நெருங்கிய உறவினருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணி பற்றிய முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும்.

சிம்மம்:
பணி, தொழில் சார்ந்த விஷஷங்களில் சாதனை செய்வீர்கள். கலைத்துறை யினருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த அளவுக்கு நிதி நிலை உயர வாய்ப்புகள் குறைவு.

கன்னி:
மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துப் போக நேரலாம். இயந்திரப் பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சோம்பலைத் தவிர்க்க வேண்டும். இளைஞர்களின் திறமை வளரும்.

துலாம்:
பாவ எண்ணம் மனதில் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பூச்சிக்கடி. போன்றவை பற்றிய பயம் வேண்டாம். நட்பு வட்டம் விரியும். மூத்தோரின் உடல்நல பிரச்னை சிறிய வைத்தியத்திலேயே சரியாகும்.

விருச்சிகம்
மேலதிகாரியிடம் பேசும்போது உரிய பயம் இருத்தல் நல்லது. தீய செயல் செய்யத் துாண்டும் நண்பர்களுடன் சேர வேண்டாம். புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து சரி செய்வீர்கள்.

தனுசு:
தேவையற்ற வாக்குவாதம் வரலாம். மதியத்துக்குப் பிறகு நிம்மதி மீளும்.
விரும்பிய துறையில் வெல்வதற்கு அல்லாட வேண்டியிருக்கும். பயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலைப்பளு கூடும்.

மகரம்:
நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் தாமதமாகவே நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செலவுகளாகவே செய்வீர்கள். தேவையான பண உதவி இன்று கிடைக்க பெறுவீர்கள்.

கும்பம்:
சிறுசிறு கவலைகள் தோன்றும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
பிரச்னைகளை சமாளித்து முயன்று வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ள குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை எடுப்பீர்கள்.

மீனம்
நேர்மையானவர்களுக்குச் சாதகமான காலகட்டமாக உள்ளது. குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து சண்டையைத் தவிர்ப்பீர்கள்.
நிதி விஷயங்களில் தாமதம் ஏற்படுவதாக ஒரு சலிப்புத் தோன்றும்.

  • Share on

இன்றைய ராசி பலன் - புதன்கிழமை ஜூன் 23, 2021

இன்றைய ராசி பலன் - வெள்ளிக்கிழமை ஜூன் 25, 2021

  • Share on