• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம் நேற்று பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆனி வருஷாபிஷேகம் நடந்தது. தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கால் ஆகம விதிப்படி நாள்தோறும் பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றது. இந்நிலையில், ஆனி வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. 

பின்னர், பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, மூலவர் மற்றும் வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு போத்தியும், சண்முகர் விமான கலசத்திற்கு சிவாச்சாரியரும், பெருமாள் விமான கலசத்துக்கு பட்டாச்சாரியார்களும் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை

  • Share on

இன்றைய ராசி பலன் - செவ்வாய்க்கிழமை ஜூன் 22, 2021

இன்றைய ராசி பலன் - புதன்கிழமை ஜூன் 23, 2021

  • Share on