• vilasalnews@gmail.com

இன்றைய ராசி பலன் - செவ்வாய்க்கிழமை ஜூன் 22, 2021

  • Share on

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதுவும் ஏமாற்றம் உண்டு. நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்து வைத்த அடியை பற்றி சிந்திக்காததீர்கள். உத்யோகத்தில் மன அமைதி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. 

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் இணக்கம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சாதிக்க நினைக்கும் சில விஷயங்களுக்கு அடித்தளம் அமைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றமான சூழ்நிலை நிலவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். சக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் மற்றவர்களை எளிதாக கவரக் கூடியதாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு ஒப்படைக்கப்படும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் மேம்படும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். புதிய தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புது உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்கவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நவநாகரீக மோகம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோ கத்தில் இருப்பவர்களுக்கு அறிவாற்றல் மென்மேலும் வளரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். சக பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலுவையி லிருந்த தொகைகள் படிப்படியாக வசூலாகும். பொருட் தேக்கம் எதுவும் ஏற்படாமல் இருக்கும். 

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது மறைக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி மறுபடியும் சூடு பிடிக்க துவங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியம் சிறக்கும். 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்

  • Share on

வீடுகட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து பெருமாள் சிலை கண்டெடுப்பு..!

திருச்செந்தூர் கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்

  • Share on