அரியலூர் மாவட்டம் கரையான் குறிச்சியில் வீடுகட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து எட்டடி உயரமுள்ள பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சரவணன் என்பவருக்கு சொந்தமான அவரது இல்லத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வந்த நிலையில் அங்கு கல் சிலை ஒன்று தென்பட்டது.
இயந்திரத்தின் உதவியுடன் பெருமாள் சிலை எடுக்கப்பட்ட நிலையில் சிலைக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.