மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்பார்ப்பையும் மீறி வேறொன்றாக நடக்க வாய்ப்புகள் உள்ளன. தொழில் ரீதியான முன்னேற்றம் படிப்படியாக சீராகி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிலிருக்கும் குழப்பங்கள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. சரியான முடிவை எடுக்கும் முன் பலமுறை ஆலோசிப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நடக்கும். நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுவதில் கவனம் தேவை. உடனிருப்பவர்களே உங்களை உதாசீனப்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டிய நாளாக இருக்கும். மருத்துவ ரீதியான உங்களை சந்திக்க நேரலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களு க்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது உத்தமம். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்டம் பெறக்கூடிய நாளாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூல பலன்களைப் பெறலாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிக ளின் தொந்தரவு எரிச்சலூட்டும். அதிகம் பொறுமையுடன் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத் தில் இருப்பவர்களுக்கு இது வரை நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சுமூகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிடங்களில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு இருக்கும். புதிய விஷயங்களை கையாள்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்த முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற் றம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்க ளுக்கு சாதகமான பலன்கள் உண்டு. மனைவிவழி உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பாதை திறக்கும் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறி லாபம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்களுடைய அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவே கவனத்துடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் பனிப்போர் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகள் சாதகப் பலனை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். உங்களுடைய நண்பர்களின் ஒத்துழைப்பு தகுந்த சமயத்தில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக கூட்டாளிகளுடன் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அனுகூலமற்ற பலன்களை என்பதால் கூடுமான வரை பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்க ளுக்கு தேவையற்ற மனக் கசப்புகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.