மேஷம்
சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் இருக்கும். வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ரிஷபம்
புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலைப் பளு அதிகரிக்கும். கடின உழைப்பை அளித்தாலும் உரிய அங்கீகாரம் இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நட்புறவைப் பராமரிப்பது நல்லது. பணப்பற்றாக் குறை அதிகரிக்கும்.
மிதுனம்
வெற்றிபெற தொடர்ந்து உழைப்பை வெளிப்படுத்துங்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்காது. கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பணத் தேவை அதிகரிக்கும்.
கடகம்
சாதகமான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுக்கான வேலையைச் சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே சகஜமான சூழல் காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
மனக் குழப்பம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். மனதில் பதற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையலாம். வீண் செலவு அதிகரிக்கும்.
கன்னி
சுமாரான நாளாக இருக்கும். திறமையை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வேலை, தொழிலில் வெற்றி காண கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.
துலாம்
செயலுக்கேற்ற பலன்கள் கிடைக்கும். நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் சிறு தவறுகள் நேரலாம். கணவன் மனைவி உறவை பராமரிக்க வீண் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. பண வரவு குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். தடைகள் பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் முடிவில் வெற்றி பெறுவீர்கள். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். பண வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும்.
மகரம்
இன்றைய தினம் சாதகமானதாக இல்லாவிட்டாலும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது கணவன் மனைவி நல்லுறவை பராமரிக்க உதவும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும்.
கும்பம்
சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிதானத்தை இழந்துவிட வேண்டாம். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகமாக இருக்கும். கூடுதல் கவனத்துடன் பணியாற்றுவது நல்லது. குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையலாம். பண இழப்புக்கு வாய்ப்பு அதிகம்.
மீனம்
சிறப்பான நாளாக இருக்கும். திறமையை வெளிப்படுத்த உகந்த நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.