மேஷம்:
உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்கலாம். வேலையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.
ரிஷபம்:
சுமாரான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது கஷ்டமாக இருக்கும். இதனால் இன்றைய தினத்தில் எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் யோசித்து செயல்படுவது நல்லது. வேலை சூழல் ஏமாற்றமளிக்கும் வகையில் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்:
சாதகமான நாளாக இருக்காது. தடைகள் பல முன்னேற்றத்தை தடுக்கும். எதையும் பெரிதுபடுத்தி மனம் வருந்த வேண்டாம். வேலை சூழல் சுமுகமாக இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைவு இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண வரவுக்குச் சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது.
கடகம்:
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றமான பலன் காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
சிம்மம்:
அமைதி குறைவான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு அதீத கவனம் தேவை. வேலையில் முன்னேற்றமான சூழல் இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் புரிதல் குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு குறையும். நிதி நிலை ஓரளவுக்கு சுமாராக இருக்கும்.
கன்னி:
பிரச்னைக்குரிய நாளாக இருக்கும். மற்றவர்களுடன் மோதல் போக்கு நிலவும். இதைத் தவிர்க்க கவனத்துடன் பழகுவது நல்லது. வேலை, தொழில் சூழல் திருப்திகரமாக இருக்காது. குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படும். நிதி நிலை சாதகமாக இல்லை. செலவு அதிகரிக்கும்.
துலாம்:
மந்தமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்துக்கொள்வது வெற்றி பெற துணை புரியும். வேலை, தொழில் சூழல் ஏமாற்றமானதாக இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் துணைவருடன் மோதல் ஏற்படலாம். நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வீண் செலவுகள் அதிகரிக்கும். செலவு விஷயத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்:
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.
தனுசு:
சுமுகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு யோசித்து செயல்படுவது நல்லது. வேலை, தொழில் சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மகரம்:
மன அமைதி குறையும். பொழுதுபோக்கு, ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதலைப் பெறலாம். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் கவனக்குறைவு ஏற்பட்டு தவறுகள் நிகழலாம். உடன் பணி புரிபவர்களுடன் நட்பாக இருப்பது நல்லது. குடும்பத்தில் உறவு நிலைகள் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.
கும்பம்:
நம்பிக்கை குறைவான நாளாக இருக்கும். நற்பலன்களைக் காண மன உறுதியுடன் செயல்படுவது நல்லது. வேலை சூழல் எதிர்பார்த்த வகையில் இருக்காது. தவறுகள் நேராமல் இருக்க விழிப்புடன் இருப்பது அவசியம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்:
தன்னம்பிக்கை மிகுந்த நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். வேலை காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாளாக இருக்கும்.