மேஷம்:
உங்களிடம் யாரும் கோபப்பட முடியாதபடி நடந்து கொள்வீர்கள். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பதால் நன்மை வரும். நண்பர்கள் தொடர்பான விஷயங்களில் சச்சரவு வேண்டாம்
ரிஷபம்:
தாமதப்பட்டு வந்த நல்ல நிகழ்வுகள் நடைபெற சாத்தியம் வரும்.
இனிமையான நாள். வாழ்வில் சிறு முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பத்தில் பிரச்னை ஏற்பட நீங்கள் காரணமாக இருக்கவேண்டாம்.
மிதுனம் :
உங்கள் பேச்சுவார்த்தையில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களுடன் இருந்த சில்லறை சண்டைகள் சரியாகும். முந்தைய முயற்சி ஒன்றின் விளைவாக நன்மை ஏற்படும்.
கடகம் :
உங்களுக்கு கீழ்பணிபுரிவோர் உங்களை அனுசரித்து செல்வார்கள்.
பயம் நீங்கும். நிதானமாகப் பேசினால் பிரச்னை வராது. நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னைகள் அகலும்.
சிம்மம் :
கடன் தொகை செலுத்தமுடியாபதபடி ஏற்பட்ட சிறு சிரமம் நீங்கும்.
அக்கம்பக்கத்தினருடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்
மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.
கன்னி :
வருத்தங்கள் நீங்குவதால் மனதிலும் செயலிலும் கலகலப்பு வரும்.
பக்தியுணர்வு அதிகரிக்கும். கணவருக்குப் பணவரவு உண்டு.
பணியில் நேர்மையான உழைப்பால் பாராட்டுப் பெறுவீர்கள்.
துலாம் :
ஓரளவு இனிமையான நாள். முயற்சிகளை அதிகரிப்பீர்கள். எதிர்பார்த்த நன்மைகள் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
விருச்சிகம் :
பலநாட்கள் நீடித்த சண்டை நீங்கும். குடும்பத்தில் கலகலப்பு வரும்.
.அக்கம்பக்கத்தினருக்கு உதவிகரமாக இருந்து போற்றப்படுவீர்கள்.
சந்தோஷம் தரும் செய்தி காலையிலேயே வந்து சேரும்.
தனுசு :
வருமானம் திருப்தி தரும். சிறிய கனவு ஒன்று நனவாகும். எதிர்ப்புகளை சமாளிக்கும்படியான பயிற்சியும் மனதிடமும் வரும். மனம்விட்டுப்பேசுவ தன் மூலம் மனஸ்தாபம் ஒன்று நீங்கும்.
மகரம் :
உடல் நலம் குறித்த கவலைகள் ஒரு வழியாக நீங்கும். நிதானப்போக்கு இருப்பதனால் வெறுப்பு வராமல் கவனமாக இருங்கள். பேச்சினால் பிரச்னையில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.
கும்பம் :
வீண்பழி வராதபடி காத்துக்கொள்ளுங்கள். கவலை குறையும். மற்றவர்கள் வம்பில் மறந்தும் தலையிடாதிருந்தால் நல்லது.
தந்தையின் வாழ்வில் ஒரு நன்மை ஏற்படக்காரணமாவீர்கள்.
மீனம் :
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திப்பீர்கள்.
பிரியத்துக்குரியவர்களின் தேவையை நிறைவு செய்வீர்கள். உறவினர், நண்பர்களுக்கு உங்களால் நன்மை ஏற்பட்டு நெகிழ்வர்.