பிலவ வருடம் ஆனி 1 ஆம் தேதி ஜூன் 15,2021 செவ்வாய்க்கிழமை. பஞ்சமி திதி இரவு 10.57 மணிவரை அதன் பின் சஷ்டி திதி. ஆயில்யம் இரவு 09.42 மணிவரை அதன் பின் மகம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வீடு மற்றும் மனைகளின் மூலம் எதிர்பாராத விரயங்கள் நேரிடும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங் களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.
ரிஷபம்
பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். புதிய மின்னணு பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். கலை நயமான சிந்தனைகள் மேம்படும். வாரிசுகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும்.
மிதுனம்
பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடும். கணவன்-மனைவிக்கிடையே சிறுசிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் நேரிடும். வாகனம் தொடர்பான பயணங்களின் போது தகுந்த கவனம் தேவை. கோப்புகளை கையாளும் உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
இழுபறியாக இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
தன வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். எதிர்பாராத செல்களின் மூலம் ஒரு விதமான சோர்வு ஏற்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.
கன்னி
அரசு தொடர்பான காரியங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சபை தொடர்பான பணிகளில் பலரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும்.
துலாம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.
விருச்சிகம்
எதிர்பாராத செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்களின் வருகையால் மனதிற்கு மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் சிலருக்கு சாதகமாக அமையும். போட்டி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
தனுசு
நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். தந்தையிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத் துடன் ஈடுபடவேண்டும். உத்தியோகம் தொடர்பான சில விஷயங்கள் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும் ஒற்றுமையும் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர் களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டார நட்புகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.
கும்பம்
குடும்ப நபர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வித்தியாச மான சிந்தனைகள் மற்றும் இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மீனம்
மறைமுகமாக இருந்து வந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனை தொடர்பா ன விஷயங்களில் லாபம் மேம்படும். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும்.