சமூக வலைதளங்களில் எப்போதுமே கட்சி அபிமானிக ளுக்கிடையே வார்த்தைப் போர் நடக்கும். குறிப்பாக திமுக மீது விமர்சனம் வைக்கிறேன் என்ற பெயரில் அதிமுக, பாஜக, ஆர்எஸ் எஸ் அபிமானிகள், நாம் தமிழர் உள்ளிட்ட எதிர் முகாம்களைச் சேர்ந்தவர்கள் அவதூறாகவும் வாய் கூசும் வகையிலான சொற்களை யும் பிரயோகித்து பதிவிடுவார்கள். அதில் முக்கியமாவனர் கிஷோர் கே சாமி. இவர் தற்போது பாஜக ஆதரவாளர் என்று கூறிக்கொள்கிறார். இதற்கு முன்பு அவரின் ‘ராஜமாதா’ சசிகலாவுக்கு ஆதரவாகக் களமாடி வந்தார்.
இவர் மறைந்த திமுக தலைவர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் குறித்து தொடர்ந்து அவதூறு களைப் பரப்பி வந்தார். சமீபத்தில் கூட மிகவும் கொச்சையாக பேரறிஞர் அண்ணா குறித்து ட்வீட் செய்திருந்தார். இதற்கு திமுக தொண்டர்கள் எதிர்வினையாற்றி னார்கள். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை. இவருக்கும் திமுக எம்பி செந்தில்குமாருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும்.
அவரிடம் முகவரி கொடுத்து என்னைக் கைது செய்யுங்கள் பார்ப்போம் என சவால் விட்டார். ஆனால் எம்பி எதுவும் பதிலளிக்க வில்லை. இச்சூழலில் தலைவர்கள் மீது அவதூறு பரப்பிய குற்றத்திற் காக அவரைக் கைது செய்திருக்கி றார்கள். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் கைதுக்கு பாஜக தலைவர்களும் ஆதரவாளர்களும் பொங்கி எழுந்துள்ளனர்.
இதுதொடர்பாக அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக குடும்பத்தை அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில், கருத்து சுதந்திரத் திற்கு இங்கு இடமேது
இதே அளவுகோல் பல தலைவர் களை கேலி பேசுவோருக்கு உண்டா? பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு. திமுகவி ற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர் #KishoreKswamy” என்று பதிவிட்டிருக்கிறார்.