• vilasalnews@gmail.com

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு - வீடுகள் முன் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம்

  • Share on

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்த்து பாஜகவினர் அவரவர் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டதில் ஈடுபட உள்ளதாக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்தொற்று பரவல் கட்டுக்குள் வராத கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. மற்ற 27 மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கொரோனோ காரணமாக வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

  • Share on

#தொடைநடுங்கிதிமுக ஹேஷ்டேக்...வறுத்தெடுக்கும் பாஜக!

கிஷோர் கே.சாமி கைது!

  • Share on