• vilasalnews@gmail.com

தோல்வி பயம் காரணமாகவே திமுகவினர் முன்கூட்டியே பிரச்சாரம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • Share on

தோல்வி பயம் காரணமாகவே, திமுகவினர் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில்  பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரணியேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத் தலத்தில் சனி பகவான் சிவபெருமானை வணங்கி பேரு பெற்றதால், சனி பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி தோஷம் நீங்க பக்தர்கள் திருநள்ளாறு சென்று வழிபடுவது வழக்கம் இந்த நிலையில், திருநள்ளாறு ஆலயத்தில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். ஸ்ரீசனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைப்பெற்றது.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  “வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி. தோல்வி பயம் காரணமாகவே தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக தேர்தல் பிரசாரத்தை திமுக தொடங்கியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவின் அடுத்த கட்ட தலைவர்களை நம்பாமல் தனது மகனையே பிரச்சாரத்திற்கு அனுப்பி உள்ளது அவரிடம் தொண்டர் பலம் இல்லை என்பதை காட்டுவதாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

  • Share on

முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தஞ்சை நாகை பகுதிகளில் பாஜகவில் யாத்திரை ரத்து

  • Share on