தொண்டனுக்கு கிருஷ்ணகிரி எம்ல்ஏ செங்குட்டுவன் கொலைமிரட்டல் விடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர் செங்குட்டுவன். கடந்த 15 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் மாறி மாறி எம்எல்ஏவாக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.இது மட்டுமில்லாமல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும், பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் தனது கட்சி அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த தொண்டர் ஒருவரிடம் அவரது சாதி பெயரைச் சொல்லி அவதூறு பேசியதோடு, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்து தாக்குவதற்கு பாய்ந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பல தரப்புகளில் இருந்தும் செங்குட்டுவன் எம்எல்ஏவுக்கு கண்டனங்கள் எழும்பி வருகின்றன. அந்த தொண்டர் சார்ந்த வன்னியர் அமைப்புகளிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.