' பிச்சையெடுத்து பிழைக்கலாமே ’ என்று கூறிய நெட்டிசனுக்கு கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நாகரீகமாக பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் டெபாசிட் கூட பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜயபிரபாகரன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த ஒரு பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் ’ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை எதற்கு இந்த தேவையில்லாத சீன், போய் பிச்சையெடுத்து பிழைக்கலாமே’ என்று பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த விஜய் பிரபாகரன் ’உங்களது மேலான கருத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’முடியாதது எதுவும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதையே நான் பின்பற்றுகிறேன்.
அதுமட்டுமல்ல பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்து இருப்போம்’ என்றும் கூறியுள்ளார். நெட்டிசனின் சர்ச்சைக்குரிய கேள்விக்கு நாகரீகமாக பதில் கூறிய விஜய் பிரபாகரனுக்கு அவரது கட்சி தொண்டர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.