தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு இருக்கும் நிலையிலும் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறையவில் லை. இந்தப் பேரிடரில் இருந்து மக்களைக் காக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடி என சிக்கலான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையிலும், நம்பிக்கையோடு கொரோனா வைரஸை ஒழிக்க போராடி வருகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வர் இருக்கையில் அமர்ந்த நாளிலிருந்து இன்றுவரை, பம்பரமாக சுழன்று கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இத்தகைய சூழலில் ட்விட்டரில் இந்திய அளவில் GoBackStalin என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் அந்த ஹேஷ்டேக்கில் பதிவாகியுள்ளன.