• vilasalnews@gmail.com

கோவை வரும் ஸ்டாலின், திமுகவினருக்கு கொடுத்திருக்கும் அறிவிப்பு!

  • Share on

கடந்த ஒரு வாரமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக கோவிட் தொற்று ஓரளவு குறைந்துள்ளதாகவும், கொரோனா அதிகம் பாதித்த கோவைக்கு வரவிருப்பபதால் தொண்டர்கள் , நிர்வாகிகள் யாரும் எனக்கு வரவேற்பு அளிக்க வர வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கோவிட் தொற்று, ஓரளவு குறைந்து வருகிறது. மேலும் குறைய வேண்டும் என்பதற்காக, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இன்று தொற்று பரவல் சங்கிலியை உடைக்க முடியாது.

ஊரடங்கில், மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 13 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பு, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

கோவை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதை அரசு கவலையுடன் கவனத்தில் கொண்டுள்ளது. அங்கு தடுப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே நாளை கோவை செல்ல உள்ளேன்.

இது முழுக்க அரசு முறை பயணம். எனவே, திமுக நிர்வாகிகள் எனக்கு வரவேற்பு கொடுக்கவோ அல்லது சந்திக்கவோ முயற்சி செய்ய வேண்டாம். மக்களின் பசி போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Share on

கறுப்பு பூஞ்சைக்கான மருந்தை கையிருப்பு வையுங்கள் - ஓ.பன்னீர்செல்வம்

பேரிடர் கால நெறிமுறைகளை கடைபிடித்து கொண்டாடுங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

  • Share on