• vilasalnews@gmail.com

பாஜக அலுவலக கட்டிடம் பூமி பூஜை_மத்திய இணை அமைச்சர் முரளிதரன் அடிக்கல் நாடினார்.

  • Share on

“காங்கிரஸ் அரசியல் லாபத்திற்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கிறது” – மத்திய அமைச்சர் முரளிதரன்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினர் அரசியல் லாபத்திற்காக போராடி வருவதாக, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முதரளிதரன் தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் புதிதாக அமையவுள்ள பாஜக அலுவலக கட்டிடத்திற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் முரளிதரன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு, கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முரளிதரன், மத்திய அரசின் வேளாண் பாதுகாப்பு சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்றும், இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து எங்கு வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும் என்று தெரிவித்தார். மேலும், இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் அரசியல் லாபத்திற்காக போராடி வருவதாக கூறிய அவர், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அரசின் தலையீடு ஏதுமின்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கோவையில் பாஜக அலுவலகம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவால் திறந்துவைக்கப்படும் என்று தெரிவித்தார்

  • Share on

பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… கிண்டலடித்த மால்வியா

தொண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ

  • Share on