கொரோனா தடுப்பூசிகளின் நன்மை குறித்து தண்டோரா போடவும், அதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு முழு அளவில் தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக் கிறார்கள். எல்லா பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்ப்பதற் காகவே கடுமையான ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது என்று சொல்லும் பாமக நிறுவனர் ராமதாஸ்,
கிராம நிர்வாக அலுவலர்களின் ஏற்பாட்டில், கொரோனா தடுப்பூசிகளின் நன்மை குறித்து தண்டோரா போடவும், அதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு முழு அளவில் தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கொரோனாவை ஒழிக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை கட்டாயமாக்கவும், தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் தமிழக அரசின் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்று அறிவிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.