தமிழகமே எதிர்பார்த்து காத்துக் கிடந்த அந்த நாள் வரப்போகிறது. ஆட்சியை அதிமுக தக்க வைக்குமா? திமுக ஆட்சியை பிடிக்குமா? மநீம, நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்விகளுக்கு இன்னும் ஒரு நாளில் பதில் கிடைத்துவிடும்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கே சாதகமாக இருந்தன. 160க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றிக்கொடியை நாட்டும் என்றே சொல்லப்பட்டது.
ஆனால், மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் கருத்துக் கணிப்பு முற்றிலுமாக மாறுபட்டதாக இருந்தது. பாண்டே, தனது சொந்த சேனலான சாணக்யாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், அதிமுக கூட்டணி 97 இடங்களிலும், திமுக கூட்டணி 111 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என்றும் 26 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்றும் கூறியிருந்தார். அதாவது, வெற்றி மகுடம் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் என கூறியிருந்தார்.
தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பிலும் ரங்கராஜ் பாண்டே அதே கருத்தை தான் முன்வைத்துள்ளார். 26 ஆக இருந்த இழுபறி எண்ணிக்கை 24 ஆக குறைந்தது மட்டுமே மாற்றம். தற்போதைய நிலவரத்தின் படி, 101 இடங்களில் அதிமுக கூட்டணியும் 109 இடங்களில் திமுக கூட்டணியும் வெற்றி பெறும் என்று கூறுகிறார். எஞ்சியிருக்கும் 24 தொகுதிகள் தான் யாருக்கு வெற்றி மகுடம் என்பதை நிர்ணயிக்கும் என்றும் அவர் சொல்கிறார்.