அதிமுக கூட்டணி 102 முதல் 123 இடங்களில் வெல்லும் என்றும், திமுக கூட்டணி 110 முதல் 130 இடங்களில் வெல்லும் என்றும் இந்தியா நியூஸ் சேனலில் வெளியிட்டுள்ள, ஜான் கீ பாத் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6ம் தேதியே வாக்குப்பதிவு நடந்திருந் தாலும், மேற்கு வங்க தேர்தல் 8 கட்டமாக நடைபெற்றதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. மேற்கு வங்கத்தின் 8வது கட்ட தேர்தல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றதால். நேற்று இரவு 7 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் டைம்ஸ் நவ் – சி வோட்டர் , ஆக்சிஸ் மை -இந்தியா டுடே, நியூஸ் -24 மற்றும் டுடே சாணக்யா, ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகளும் அதிமுக கூட்டணி 70 தொகுதிகளுக்கு மேல் வெல்லாது என்று சொல்லி வரும் நிலையில், 123 இடங்களைப்பெறும் என்று ’ஜான் கீ பாத் எக்ஸிட் போல்’ கணிப்பு சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.