• vilasalnews@gmail.com

“தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி… நாளை தெரியும் முடிவு”

  • Share on

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பிறகு மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற வுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படாது; திட்டமிட்டபடி நடந்தே தீரும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஏப்ரல் 29ஆம் தேதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாளை இரவு 7.30 மணிக்கு கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்த முடிவுகளில் ஓரளவு யார் ஜெயிப்பார்கள் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை இன்று ஆய்வு செய்தார்.


அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரவக்குறிச்சி தொகுதி மட்டுமின்றி கரூரிலுள்ள நான்கு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. நாளை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும். அதில் ஓரளவு முடிவுகள் தெரியும்.

பெண்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். 2016ஆம் ஆண்டு தேர்தலில் பெண்களின் மன ஓட்டத்தைக் கணிக்க தவறிவிட்டனர். இம்முறை பெண்களின் மன ஓட்டத்தைச் சரியாகக் கணித்திருப்பார்கள் என நினைக்கிறேன். எனது கருத்துப்படி அதிமுக தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சியைப் பிடிக்கும். 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள பாஜக 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் நுழையும்” என்றார்.

  • Share on

காலையில் இணைந்த ‘திமுக எம்.எல்.ஏவுக்கு’ மாலையில் சீட் !

அதிமுக 123 இடங்களில் வெல்லும்: ’ஜான் கீ பாத்’எக்ஸிட் போல் பரபரப்பு

  • Share on