தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
விளவங்கோடு உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. கன்னியாக்குமரி மக்களவை இடைத் தேர்தலில், மறைந்த வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் மயுரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் கே.செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார்.