• vilasalnews@gmail.com

நெல்லை தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை_ நயினார் நாகேந்திரன் உறுதி

  • Share on

நெல்லை தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதி அளித்துள்ளார்.

நேற்றைய தினம் பாஜக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வதற்கு முன்பே நல்ல நாள் என்பதால் நெல்லை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன்.

நெல்லை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தியிடம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று மனு தாக்கல் செய்தார். 

இதை பற்றி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறுகையில்:  நெல்லை சட்டசபைத் தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் கடந்த 25 ஆண்டு காலமாக நன்றாக, சகோதர, சகோதரியாக, அவர்கள் வீட்டு பிள்ளையாக இருந்து வருகிறேன்.

தற்போது 5வது முறையாக போட்டியிடுகிறேன் நெல்லை தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளேன். மேலும் தொகுதி வளர்ச்சிக்கு கடுமையாக பாடுபடுவேன். நெல்லை மக்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்த, நெல்லையில் தொழில் வளத்தைப் பெருக்க, ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

மக்களுக்காக பாஜக சார்பில் நெல்லை சட்டசபை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அகில இந்திய தலைவர் நட்டா ஜி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரை வணங்குகிறேன். நெல்லை தொகுதி மக்கள் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெற்று மக்களின் பாதுகாவளனாக செயல்படுவேன். என்று அவர் கூறினார்.

  • Share on

தமாக சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள்… பட்டியல் அறிவிப்பு

அமைச்சர் உதயகுமார் தேநீர் அருந்திய வீட்டில் கலைஞர் அளித்த இலவச தொலைக்காட்சி பெட்டி : பிரச்சாரத்தில் ருசிகரம்

  • Share on