அதிமுக கூட்டணியில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் த.மா.கா, இன்று தனது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அதிமுக – திமுக கூட்டணி கட்சிகள், தொகுதிப் பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன. இன்று தொடங்கி வரும், 19ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.
ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், த.மா.கா. போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை ஜி.கே வாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, திரு.வி.க. நகர் (தனி) – பி.எல். கல்யாணி, ஈரோடு (கிழக்கு) – எம். யுவராஜா, லால்குடி – டி.ஆர் தர்மராஜ், பட்டுக்கோட்டை – என்.ஆர்.ரங்கராஜன், தூத்துக்குடி -எஸ்.டி.ஆர். விஜயசீலன் மற்றும் கிள்ளியூர் – கே.வி ஜூட் தேவ் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இதன்படி, 4 தொகுதிகளில் த.மா.கா. உடனும் திமுக நேரடியாக மோதுகிறது.