இஸ்லாமியர்களுக்கு 10% இட ஓதுக்கீடு , சிறைவாசிகளின் விடுதலை சம்பந்தமாக தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் கட்சிகளுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு தெரிவிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 16வது சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுக்கு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு மூன்று தொகுதியும் மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டும் தொகுதியும் திமுக கொடுத்துள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதியில் இரு கட்சிகளுக்கும் மொத்தம் ஐந்து தொகுதிகள் மட்டும் திமுக ஓதுக்கியுள்ளதை அடுத்து இஸ்லாமியர்களுக்கிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது .
திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆகிய இரு கட்சியின் தலைவர்கள் இஸ்லாமியர்களின் இட ஓதுக்கிடு மற்றும் தமிழகத்தில் பத்தாண்டுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை சம்பந்தமாக தேர்தல் வாக்குறுதி ஓப்பந்தம் செய்தீர்களா? திமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 10% இட ஓதுக்கிடு, மற்றும் தமிழகத்தில் பத்தாண்டுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சிறை வாசிகளின் விடுதலை சம்பந்தமாக திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுப்பாரா ?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் இஸ்லாமிய கட்சிகளுக்கோ அல்லது திமுகவில் பொறுப்பு வகிக்கும் இஸ்லாமியர்களுக்கோ ஒரு நாடாளுமன்ற தொகுதிகள் கூட ஓதுக்கப்படவில்லை. இதனை திட்டமிட்டு தொடர்ந்து இஸ்லாமியர்களை புறக்கணித்து வரும் திமுகவுக்கு ஆதரவு கொடுப்பதனால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எந்தவித பயனும் இல்லை எனவும்,
தமிழகத்தில் ஓரு கோடிக்கும் மேலாக இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆனால் தேர்தல் காலங்களில் இஸ்லாமியர்களுக்கு கூடுதலாக தொகுதிகள் ஓதுக்காமல் கண் துடைப்பு வகையில் ஓவ்வொரு இஸ்லாமிய கட்சிக்கும் தனி தனியாக 1 தொகுதி, 2 தொகுதி,3 தொகுதிகளை ஓதுக்கி கொடுத்து இஸ்லாமிய அரசியல் கட்சியின் வளர்ச்சியையும் அரசியல் அங்கீகாரத்தையும் தடுக்க நினைக்கிறாதா திமுக?
எனவே, தமிழகத்தில் நடை பெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு 10% இட ஓதுக்கீடு , மற்றும் தமிழகத்தில் பத்தாண்டுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை சம்பந்தமாக தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் கட்சிகளுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் முழுமையான ஆதரவை தெரிவித்து அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் பிரச்சாரம் செய்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்வோம் என அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்