கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் வெளிவரும் அனைத்து மொழிப் பத்திரிக்கைகளிலும் தமிழகச் செய்திகள் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக விசிட், பா.ஜ.க வேல் யாத்திரை, நடிகை குஷ்பு சந்தித்த விபத்து, 10 கோடி அபராதம் கட்டிய சசிகலா ஆகிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருப்பதையே இந்தச் செய்திகள் காட்டுகின்றன.