• vilasalnews@gmail.com

பாமகவில் இருந்து முக்கிய நிர்வாகி வைத்தி விலகல்

  • Share on

வன்னியர் சங்கத்தின் மாநிலசெயலாளர் பொறுப்பில் இருந்தும், பாமகவில் இருந்தும் விலகுவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்திருக்கிறார் வைத்தி. உழைப்புக்கு மதிப்பு இல்லை. நடிப்புக்கு மட்டுமே மதிப்பு என்றும் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் வைத்தி.

ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளராக பாலு அறிவிக்கப் பட்டுள்ளதால், வைத்தி அதிருப்தி அடைந்து இந்த முடிவினை எடுத்திருப்பதாக தகவல்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20 தொகுதிகளையும் அதிமுக ஒதுக்கியது. பாமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியது.

செஞ்சி, மைலம், ஜெயம்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பொண்ணாகரம், தர்மபுரி, விருதாச்சலம், காஞ்சிபுரம், கீழ்பெண்ணாத்தூர், மேட்டூர், சேலம், சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேளூர், ஆத்தூர் ஆகிய 23 இடங்களில் பாமக போட்டியிட உள்ளது.

பென்னாகரத்தில் ஜி.கே மணி, ஆத்தூரில் திருமதி திலகபாமா, கீழ்ப்பென்னாத்தூரில் செல்வக்குமார், திருப்போரூரில் திருக்கச்சூர் ஆறுமுகம், ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞர் பாலு, ஆற்காட்டில் கே.எல். இளவழகன், திருப்பத்தூரில் டி.கே. ராஜா, தருமபுரியில் எஸ்.பி வெங்கடேஸ்வரன், சேலத்தில் மேற்கு அருள், செஞ்சியில் ராஜேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்திருக்கிறது.

இதில், ஜெயங்கொண்டம் தொகுதியை வைத்தி எதிர்பார்த்திருந்துள்ளார். அவருக்கு கிடைக்காததால், அவர் பாமகவில் இருந்தும், வன்னியர் சங்க பொறுப்பில் இருந்தும் விலகியிருக்கிறார்.

  • Share on

கட்சி சின்னங்களுடன் சேலைகள்: சூடுபிடிக்கும் விற்பனை!

தொகுதி மாறி போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்!

  • Share on