• vilasalnews@gmail.com

ஆளுக்கு ஒரு தொகுதி - அரவணைத்துக் கொண்ட அதிமுக!

  • Share on

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்களும், பாஜகவுக்கு 20 இடங்களும், அதிமுகவுக்கு 177 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 220 தொகுதிகளுக்கான பட்டியல் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் (தனி) தொகுதியும், அதிமுக கூட்டணியில் என். ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

அதிமுக – புரட்சி பாரதம் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு கேவி குப்பம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் அக்கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி போட்டியிடுகிறார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுடனான கூட்டணியில் ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு கும்பகோணம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சியும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.

  • Share on

33% இல்லங்க… வெறும் 13தான்… 13 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்புக்கொடுத்த அதிமுக!

கட்சி சின்னங்களுடன் சேலைகள்: சூடுபிடிக்கும் விற்பனை!

  • Share on