ஜெயலலிதா பெண்கள் நாட்டின் கண்கள் என்பார். அதற்கேற்றார் போல் தாலிக்கு தங்கம், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் சலுகை, பெண் திருமணத்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினார்கள். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர் பன்னீர்செல்வம், “ஆணுக்கு பெண் சரி சமம் என்பார்கள் அதற்கான ஆட்சி தான் அதிமுக” என தெரிவித்திருந்தார்.
தொகுதிப் பங்கீடு முடிவதற்கு முன்பே நட்சத்திர வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. ஒன்று இரண்டாம் கட்டமாக 171 வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் இணைந்து வெளியிட்டனர். அதில் அதிமுகவில் 13 பெண்கள் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோகுலா இந்தியா அண்ண நகரிலும், பா வளர்மதி ஆலந்தூர் தொகுதியிலும், திருமணி கணிதாசம்பதி செய்யூரிலும், திருமதி மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், பரிதா குடியாத்தம் தொகுதியிலும், ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி ஓசூரிலும், சித்ரா ஏற்காட்டிலும், பொன். சரஸ்வதி திருச்செங்கோட்டிலும், இந்திரா காந்தி துறையூரிலும், ஜெயபாரதி கந்தர்வகோட்டையிலும், லட்சுமி கணேசன் சிவகாசியிலும், திருமதி கீர்த்திகா முதுகளத்தூரிலும், ராஜலெட்சுமி சங்கரன் கோவிலிலும் போட்டியிடுகின்றனர். நிலக்கோட்டை தொகுதியில் திருமதி தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.