எனக்கு நடந்த கார் விபத்து போல் உங்களுக்கு நடந்திருந்தால் உங்கள் பேண்ட் ஈரமாகி இருக்கும் என்று நடிகை குஷ்பு, பிரபலம் ஒருவருக்கு பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கடலூருக்கு குஷ்பு சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்கு ள்ளானது. இந்த விபத்தில் இருந்து தான் முருகன் அருளால் தப்பித்ததாக குஷ்பு கூறி இருந்த நிலையில் இந்த விபத்தே போலி யானது என்றும், செட்டப் செய்யப் பட்டது என்றும் ஒரு சிலர் விமர் சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது சமூக வலைத்தளத்தில் குஷ்புவின் இந்த விபத்து குறித்து கூறியதாவது:
குஷ்பூ அவர்கள் மிகச்சிறந்த நடிகை என்பதை உறுதிப்படுத்தும் புகைப்படம்.. ஸ்கிரிப்ட்டை ஒழுங்கா எழுதுங்க.. நிறைய ஓட்டை இருக்கு பாருங்க.. என்று கிண்டலடித் திருந்தார்.
கார்டூனிஸ்ட் பாலாவின் இந்த பதிவிற்கு பதிலடி கொடுத்த குஷ்பு கூறியதாவது:
நான் போராடிய ஒருவர் இப்படி பேசுவதை கேட்டு வெட்கப் படுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், போலியான விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் மரணத்தை சந்திக்கும் அந்த நிமிடம் உங்கள் முகம் என்னைப்போல் தைரியமாக இருக்காது. உங்கள் பேண்ட்டை நீங்கள் ஈரமாக்கிவிடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களது பேச்சு கோழைத்தனமாக உள்ளது. விரைவில் குணமடையுங்கள் பாலா, என்று கூறியிருந்தார்