தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, புதுச்சேரியில் பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தனித்து போட்டியிடப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
புதுச்சேரி பேரவை தேர்தலில் 30 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடுவதாக புதுச்சேரி மாநில பாமக துணைத் தலைவர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.
பாமகவுக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா அறிவித்ததை தொடர்ந்து தனித்து போட்டியிட போவதாக முடிவெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில், புதுச்சேரியில் பாமகவும் விலகி இருப்பது, பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.