• vilasalnews@gmail.com

"தெய்வத்துடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி - வேறு யாரிடமும் கூட்டணி வச்சா எங்க கெத்து என்னாகுறது” – விஜயபிரபாகரனின் பக்கா பிளான்

  • Share on

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அதிரடி திருப்பம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இன்று அனைத்தையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகியிருக்கிறது.

ஒரு காலத்தில் பெரிய அரசியல் சக்தியாக இருந்த நம்முடைய கட்சி அஞ்சுக்கும் பத்துக்கும் சீட்டுக்காக தொங்கிக்கொண்டிருக்கிறதே என்ற தொண்டர்களின் ஏக்கத்தை இந்த ஒரு அறிவிப்பு தூக்கியெறிந்துவிட்டது. அவ்வளவு பூரிப்பு, அவ்வளவு ஆர்ப்பரிப்பு அவர்களின் முகங்களில்.

அதே பூரிப்பும் ஆர்ப்பரிப்பும் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகளிடமும் காணப்படுகிறது. குறிப்பாக எல்கே சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோரும் சூளுரைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கூட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், “‘அதிமுகவிற்கு தான் இனி இறங்குமுகம். அதிமுகவின் தலைமைதான் சரி இல்லை. நாங்கள் கேட்கிற சீட் கொடுக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும்.

தலையே போனாலும் தன்மானத்தை இழக்க மாட்டோம். யாருக்கும் தேமுதிகவினர் சளைத்தவர்கள் அல்ல. நாங்கள் கமலின் மக்கள் நீதி மய்யத்துடனோ, டிடிவி தினகரனின் அமமுகவுடனோ கூட்டணிக்குச் செல்லமாட்டோம். நாங்கள் தான் அரசியலில் சீனியர். அதனால் தெய்வத்துடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி. 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம்” என்றார்.

  • Share on

திமுகவுக்கு தந்த ஆதரவு வாபஸ் : கருணாஸ் அந்தர் பல்டி!

அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி

  • Share on