• vilasalnews@gmail.com

“எடப்பாடிக்கு டெபாசிட்டே கிடைக்காது” – தேமுதிக ‘முக்கிய புள்ளி’ பரபரப்பு பேச்சு… அதிமுகவுடனான நட்பு முறிகிறதா?

  • Share on

தமிழக அரசியல் ஆடுகளத்தில் தற்போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை முடித்துவிட்டது.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் மட்டும் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவுக்குப் பெரும் தலைவலியாக விஜயகாந்தின் தேமுதிக இருக்கிறது.

கட்சியின் செல்வாக்கு குறைந்துவிட்டது; அதனால் குறைந்த எண்ணிக்கையில் வாங்கி கொள்ளுங்கள் என்பதே அதிமுகவின் வாதம். அதற்குப் பதிலீடு செய்ய ராஜ்யசபா கொடுக்கிறோம் என்ற அளவு வரை இறங்கிவந்திருக்கிறது. ஆனால் தேமுதிகவோ பாமக, பாஜகவை விட 2 தொகுதிகளாவது அதிகமாக வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறது.

அதாவது 25 தொகுதிகள் நிச்சயம் வேண்டும் என்பதே அக்கட்சியின் குறிக்கோள். 15இல் நின்ற அதிமுக 17+1 எம்பி சீட்டு என்ற அளவில் இறங்கிவந்தும் தலையசைக்காமல் விடாக்கொண்டனாக தேமுதிக இருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது.

தேமுதிகவுக்கு அதிமுக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக சேலம் ஆத்தூரில் நடந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகியின் பேச்சு அமைந்துள்ளது. தேமுதிக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் பொருளாளர் இளங்கோவன், “அதிமுக தேமுதிகவை மதிக்கவில்லை.

இதனால் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து நின்றாலும் தேமுதிக வெற்றிபெறும். நாம் கெஞ்சிக் கொண்டிருக்க அவசியமில்லை. எடப்பாடி தொகுதியில் தேமுதிக வேட்பாளரை நிறுத்தினால் பழனிசாமியால் டெபாசிட் கூட வாங்க முடியாது” என்று ஆவேசமாகப் பேசினார்.

இச்சூழலில் அதிமுக கொடுக்கும் இடங்களை வாங்கி கொள்ளலாமா, தனித்துப் போட்டியிடலாமா, வேறு கூட்டணிக்குச் செல்லலாமா போன்ற கேள்விகளை முன்வைத்து பிரேமலா, சுதிஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்குப் பின் தனது முடிவை தேமுதிக அறிவிக்கும் என தெரிகிறது. அதிமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கி கொண்டு அமைதி காப்பது தான் தேமுதிகவின் வியூகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • Share on

ஜெ. ஸ்டைலில் திமுகவிற்கு வைத்த செக்.. வலுவாக ஸ்கோர் செய்த இபிஎஸ்.. செம!

“அதிமுக டெபாசிட் இழக்கும்; கே.பி.முனுசாமி பாமகவின் கொபசெ ” : எல்.கே. சுதீஷ் ஆவேசம்!

  • Share on