திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசகரும், கவிஞரும், எழுத்தாளுமான மனுஷ்யபுத்திரன், திமுகவுக்கு ஆதரவாக கடந்த தேர்தல்களில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். திமுகவுக்கு ஆதரவாக விவாதங்களிலும் பங்கேற்று வந்தவர் மனுஷ்யபுத்திரன்.
அவர் இன்று 9.3.2021 காலை 7.55 மணிக்கு,
’’விடைபெறுகிறேன்
என் கண்ணீர் என்னை
நாணமுறவைக்கிறது’’ என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
திமுகவில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு முடிந்து, விருப்பமனு கொடுத்தவர்களுடன் நேர்காணல் நடந்து முடிந்து, திமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட இருக்கிறது.
இந்நிலையில்,திமுகவில் சீட்டு கேட்டு கிடைக்காத விரக்தியில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக பலரும் சொல்லி வருகின்றனர். அதாவது சீட்டு கிடைக்காத காரணத்தினால் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் என்றே சொல்லி வருகின்றனர்.