தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்நோக்கி அதிமுக, திமுக ஆகிய மாபெரும் கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அரசியல் கட்சிகள் அவ்வப்போது கூட்டங்களை கூட்டி மக்களை சந்திப்பதையும் தவிர்க்கவில்லை.
மீண்டும் வெற்றி வாகையை சூட திட்டமிட்டிருக்கும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை போல, திமுகவும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததோடு ஐபேக் நிறுவனத்துடன் கைகோர்த்து பல திட்டங்களை தீட்டியிருக்கிறது. ஒவ்வொன்றாக தேர்தல் நேரத்தில் வெளிபடுமென வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதனிடையே, தேர்ந்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தொடங்கிவிட்டன. ஒரு சில கருத்து கணிப்புகளின் படி, திமுக வெற்றி மகுடத்தை சூடும் என சொல்லப்படுகிறது. அதாவது, தமிழக மக்கள் எதிர்க்கும் பாஜகவுடன் அதிமுக கைகோர்த்திருப்பதால் அவர்கள் தோல்வியை தழுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை சரியாக கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவையும் கணித்திருக்கிறார்.
2021ம் ஆண்டு தேர்தல் அதிமுகவுக்கே சாதகமாக இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி வெற்றி மகுடத்தை சூடும் என்றும் திமுக 100க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.